Thursday, November 25, 2010

தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா?




ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் 5.11.2010 வெள்ளிக்கிழமை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மலையாள திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ் நடிகர்கள் பங்கேற்கிறார்கள் என்ற விளம்பரத்தை பார்த்து தமிழ் மக்களும் விழாவைப் பார்க்க சென்றிருக்கிறார்கள் அப்போது விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஆர்யாவின் பேச்சு அங்கு இருந்த தமிழர்களின் ரத்தம் கொதிக்க வைத்திருக்கிறது.


‘நான் ஒரு மலையாளியானு’ என்று ஆரம்பித்து தமிழர்களையும் தமிழ் சினிமாவையும் ரொம்பவும் கேவலமாக பேசி இருக்கிறார் ஆர்யா... தமிழ் சினிமாவை போன்று மலையாள சினிமா இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு பாட்டு ஒரு சண்டை காட்சி இருந்தால் போதும் நடிப்பு தேவை இல்லை, ஆனால் மலையாள சினிமாவில் அதிகம் நடிக்கவேண்டும். அதனால் தான் யாரும் மலையாள படத்தில் நடிக்க பயப்படுகிறார்கள். எனக்கு நடிப்பு இல்லாத சிறிய கதாபாத்திரம் கொடுங்கள்... மலையாளத்தில் வந்து நடிக்கிறேன்.இங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்தால் ரெம்ப ஆச்சரியம்! தமிழ்நாட்டில் இப்படி கூட்டம் பார்க்க முடியாது என்று தனது மலையாள விசுவாசத்தை ரொம்பவே காட்டியிருக்கிறார் ஆர்யா.

அவர் ஒரு மலையாளி என்பது அங்கிருந்த தமிழ் மக்களுக்கு அப்போதுதான் புரிந்திருக்கிறது.அதை கேட்டு எங்கள் ரத்தம் கொதித்தது என்றும், அந்த விழாவில் கலந்து கொண்ட தலைவாசல் விஜய் மற்றும் பாடகர் கார்த்திக் இருவரும் தமிழில் பேசியது ஆறுதல் அளித்தது என்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆர்யாவின் இந்த பேச்சுக்கு கண்டனத்தை தெரிவித்தார் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் வி.சி.குகநாதன். அதற்கு, வி.சி.குகநாதன் கயிறு திரித்து புது பிரச்சினையை கிளப்பி இருக்கிறார் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அசின் இலங்கைக்கு சென்ற விவகாரத்திலும், அது அவரின் தனிப்பட்ட சுதந்திரம் என்று அசினுக்கு வக்காளத்து வாங்கியது தென்னிந்திய நடிகர் சங்கம்.

இதைப் பற்றி மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.குகநாதன், அந்த நடிகரின் பேச்சு தமிழ் நடிகர்களை கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது.உலக புகழ்பெற்ற நடிகர்திலகம் சிவாஜிகணேசனில் இருந்து கமல்ஹாசன் வரை பல அபூர்வ நடிகர்களை கொண்டது, தமிழ் பட உலகம். அவர்களை எல்லாம் கேவலப்படுத்துகிற மாதிரி அந்த நடிகர் பேசியிருக்கிறார். நான், எந்த நடிகருக்கும் விரோதிஅல்ல. ஆனால் தமிழர்களையும், தமிழ் கலைஞர்களையும் பழித்தால், அவர்களின் குரல்வளையை கடித்து துப்பவும் தயங்க மாட்டேன் என்றார். 'நான் கடவுள்' படத்தினால், இந்தி சினிமா உலகமே பாலாவை பிரம்மிப்போடு பார்த்து வருகிறார்கள். அதில் நடித்த ஆர்யாவுக்கு தமிழ் சினிமாவின் மகிமைப் புரியாதா என்ன?. வெறும் பாட்டையும் பைட்டையும் நம்பியா 'மதராசபட்டினம்' எடுக்கப்பட்டது. இதெல்லாம் ஆர்யாவுக்கு நன்றாகவே தெரியும்.... ஆனால் என்ன செய்வது தன் இனத்தின் விசுவாசத்தை சரியான நேரத்தில் காண்பித்திருக்கிறார் என்றே சொல்லமுடியும். அதற்காக தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா?


மலையாள சினிமா உலகின் பெரும் நட்சத்திரங்களான மம்முட்டியும் மோகன்லாலும் கமல்ஹாசனின் பெருமையை உரக்கச் சொல்கிறார்களே அது ஏன்?. மலையாள சினிமா தற்போது தமிழ் சினிமாவைப் பார்த்து கற்றுக்கொள்கிறது என்று பிரபல மலையாள இயக்குனர் ரஞ்ஜித் சமீபமாய் நடந்த 'ஈசன்' இசை வெளியீட்டு விழாவில் சொன்னாரே! இது தமிழ் சினிமாவின் பெருமை இல்லையா! சினிமாவுக்கு மொழியில்லை... மலையாளத்திலும் நல்ல சினிமாக்கள் இருக்கிறது என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தமிழ் சினிமாவால் பிழைக்கும் ஆர்யா தமிழ் சினிமாவையும் தமிழ் நடிகர்களையும் அசிங்கப்படுத்துவதா என்பதே கேள்வி! நடிக்க தெரிந்தவர்களை மட்டுமே நடிகன், நடிகை என்று சொல்கிறோம். நடிப்பே இல்லாத தமிழ் சினிமாவில் வந்து போகும் உங்களை நடிகன் என்று சொல்வது தவறில்லையா? நீங்களும் ஒரு நடிகன் என்றால் உங்கள் திறமையை காட்ட வேண்டிய இடம் மலையாள சினிமா தானே? இதுவே உலகத் தமிழர்களின் கேள்வி!


இப்போது தானே தெரிகிறது... நயன் சேச்சியுடன் ஆர்யா அடித்த லூட்டி எதற்காக என்று!!!


நன்றி : நக்கீரன்

1 comment:

ShivChinna said...

Manangetta kabodhi, eppadi da ungalala ippadi pesa mudiyadhu !!! ?????