
படம் பார்த்துட்டேன்னு ஒரு சாட்சி..!
இந்தியா முழுவது ரசிகர்கள் ஆவலுடன் நாளை எதிர்ப்பார்த்துக் கொண்டு எந்திரன் படம் யூஏயி அரபியா நாட்டில் இன்று காலை 7.30 மணி காட்சியும் முதல் காட்சி திரையிட தொடங்கிவிட்டன ரஜினி படம் என்றால் முதல் நாள் முதல் காட்சி என்ற பழைய முறுக்குடன் டிக்கெட் எடுத்து படம் பார்த்துட்டேனுங்கோ..(அப்படினா வயசு ஆயிடுச்சா.?)
சரி இப்போ படத்தின் கதைக்கு வருவோம்..!
மனிதனுக்கு போல் காதல் ரோபோவுக்கும் வந்தால்..?! அதை உறுவாக்கியவனே வேண்டாம் என சொல்லும் போது என்ன நடக்கும் எனபதையே முக்கியதுவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்.!(எனக்கு இப்படிதானுங்க புரியுது சங்கர் என்ன நினைத்து எடுத்தாரோ..?)
ஆரம்பம் முதலில் ரஜினி தோன்றும் காட்சி எந்தவித ஆர்பார்ட்டம் இல்லாமல் மிகவும் எளிமையாகவும் ரஜினிக்கு பூ கொடுக்கும் ரோபோ காட்சியும் இனிமையாகவும் இருந்தது இதற்க்காக ரஜினிக்கு ஒரு சாபஷ்..!(ஏன்னா இப்பொ உள்ள கத்துக்குட்டியும் பயங்கர ஆக்ஷனுடன் தோன்றுவதை பார்த்து பார்த்து ச்சேனு… இருக்கும் இந்த காலத்தில் அதுவும் சூப்பர் ஸ்டார்..? சூப்பர்தானுங்கோ..!)
சந்தானம் & கருனாஸ் கொஞ்சம் சிரிக்க வைக்கிராங்க அதை விட ரோபோ ரஜினி மிகவும் ஜாலியாகவும் ரசிக்கும் படியாகவும் சிரிக்க வைத்து இருக்கிறார்.!
(என்னாடா இன்னும் ஐஸ் பற்றி ஒன்னும் சொல்லலேனு நீங்க முனங்குவது எனக்கு கேட்க்குது)
என்ன சொல்வதுங்க இன்னும் 10 வருசத்துக்கு அவங்கத்தான் உலக அழகி..!
இந்த பொம்பள என்னாமா கல்க்கை இருக்கு சூப்பர்தானுங்கோ…! நடிப்பு நடனம் காதல்னு கலக்கி இருக்காங்க(ரோபோவே மயங்கிடுச்சுனா பார்த்துக்கோங்க.!)
பாடல்கள்.! முதல் பாடல் நான்கு வரி பாடலுடன் எஸ்பி யின் குரலுடன் நமக்கு ஒரு முறுகேற்றுகிறது..! பின்பு வரும் காதல் அனுக்கள், இரும்பிலே ஓர் இருதயம், கிளிமாஞ்சாரோ மூன்று பாடல்களும் நம்மை படம் விட்டு வரும் போது முனுமுனுக்க வைக்கின்றன..!காட்சி அமைப்பும் நடனமும் ரஜினிக்கு இன்னும் வயசாகலனு சொல்ல வைக்கின்றன..!
இடையில் காதல்,செண்டிமெண்டுனு படம் நகர்ந்தாலும் கிளைமேக்ஸ்க்கு ஒரு தனி சபாஸே சங்கருக்கு சொல்லனும்..! கடைசி 20 நிமிடமும் நம்மை அரியாமலே கை தட்ட வைக்கின்றன காட்சிகள்..!
ரகுமான் இசை படிவில் படம் தொடக்க முதல் கடைசி நிமிடம் வரை ராஜியமே நடத்தியிருக்கார்னு சொல்லாம்..! உங்களுக்கும் ஒரு தனி சாபாஷ்ங்கோ..!
படம் குடும்பத்துடன் குதுகலமாக பார்க்கலாம்…!100% காரண்டி..!!
ஆனா இது ஒரு ரஜினி ரசிகனா பார்க்காதிங்க ஏன்னா ஒரு பஞ்ச் டயலாக்கும் இல்லை 20 பேரை பறக்க பறக்க அடிக்கும் சண்டை காட்சி இல்லவே இல்லை.! கலாபவன் மணிக்கு பயந்து ஓடுவதும் ரஜினியா இப்படி தோன்ற வைக்கிறது..! ஐஸ்வின் முத்ததிற்க்காக கொசுவை பிடிக்க சொல்லும் ரோபோ ரஜினி இந்த காட்சி தேவையானு முனுமுனுக்க வைக்கிறது..! மொத்ததில் இது ஒரு சங்கர் படம்..!
எந்திரன் ஒரு மந்திரன்..!
9 comments:
Thanks for the review.. I am excited...
english plz in english :)
இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதி இருக்கலாம் .. படம் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?
pls rewrite in english...atleast the major details
Thanks :)
அடப்பாவிகளா...
அருமை...
இன்னொரு விமர்சனம்
http://tamilpp.blogspot.com/2010/09/blog-post.html
தமிழன் எனக்கு ஈகரையில் தாமு என்ற பெயரில் நுழைய முடியலை. ஏன்? தமிழில் என் பெயர் இருப்பதால் அதனை காப்பி செய்து பெஸ்டு செய்ய முடியலை அதற்க்கு என்ன செய்யட்டும். பிலீஸ் உதவி தமிழன்.
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in
Post a Comment