Wednesday, February 24, 2010

ஹைய்..ஹைகூ...!




முகவரி

தொலைந்துவிட்டதா..

மலர்களிடம்

விசாரிக்கிறதே

வண்டு.!



நடமாடும் கோலம்

காலில்

மருதாணி..!



உடைக்க விருப்பம்

பாஸானால் தேங்காய்

பெயிலானால் பிள்ளையார்.



ஒரு சாண் வயிற்றுக்கு

எண் சாண் உடம்பு விற்றாள்

விலைமாது.!




திருப்பதியில் திருடன்

மொட்டையானது…..

உண்டியல்.!



ஆடை உருவியும்

அம்மண மாகவில்லை

பால்..!



சமையல் முடிந்தா?

அடிக்கடி விசாரிக்கும்…

காகம்.!



விஷம்தீண்டாமலே

நுரை தள்ளியது….

அலைகளுக்கு.!

7 comments:

அன்புடன் நான் said...

ஆடை உருவியும்

அம்மண மாகவில்லை

பால்..!




விஷம்தீண்டாமலே

நுரை தள்ளியது….

அலைகளுக்கு.!//

என்னை மிக கவர்ந்தது.

அத்தனையும் மிக அழகு....

மிக ரசித்தேன்

(இந்த சொல் சரிபார்ப்பை எடுத்து விடுங்கோ)

சிவப்ரியன் said...

அத்தனை ஹைக்கூ- வும் மிக அருமை.
நிறைய ரசித்தேன். வாழ்த்துக்கள்.

ManA © said...

Very nice..:D

Tamilzhan said...

[b]கருணாகரசு ,சிவப்பிரியன்,மனா.[/b]
வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்..

prabhadamu said...

மிக மிக அருமை.

Tharshy said...

அத்தனையும் அருமையான சிந்தனைகள்...வாழ்த்துக்கள் சிந்தனைக்கு....:)

Tamilzhan said...

வருகைக்கு நன்றிகள் கொற்றவை & பிரபாதாமு