Thursday, February 18, 2010
கடலை போடுவதின் பயன்கள்..!
எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வேர்க்கடலையில் நிறைய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்துள்ளது. எனவே, குழந்தைகள் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகிறது.
சேயாபீன்சிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதமும், முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதமும் வேர்க்கடலையில் உள்ளது.
மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு மற்றும் பற்கள், எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.
எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது.
ஒபிசிட்டி பிரச்சினை உள்ளவர்கள், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சர்க்கரை சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. குறைந்த அளவே உணவை சாப்பிட முடியும். இவ்வாறாக உடல் எடையையும் குறைக்கலாம்.
வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
பின்குறிப்பு : வேர்க்கடலையை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது. அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுக் கேளாறுகள் ஏற்படும். நீரிழிவுநோய், மேக நோய் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
நன்றி : தினத்தந்தி
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
எனக்கு முதல் கடலையா!இல்லன்னாலும் பரவாயில்லை.வேர்ட் வெரிபிகேசனை துரத்துங்க!
நல்ல தகவல் நன்றி தமிழன்.
ராஜ நடராஜன் உங்கள் வருகைக்கு நன்றிகள்..!
வருகைக்கு நன்றி தாமு.!
கவுத்திடீங்களே.. அது சரி..
நாங்க கவுரணுன்னு தானே இதை
எழுதினீங்க...
வருகைக்கு நன்றி வெங்கட்..!
Post a Comment