Monday, March 1, 2010

ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!!


நான் ஏழாவது படிக்கும் போது என்னமோ தெரியல ரஜினி மீதும் அவர் படங்கள் மீதும் அளவுக்கடந்த பிரியம் ரஜினிய தவறா சொன்னா கடுமையான் கோபம் வரும்..! ஏன் ஏன் என என்னும் ஒரு கேள்வி அப்போதுதான் எங்க தெரு பசங்க அவன் ரஜினி ரசிகண்டானு சொன்னாங்க..!?
என்னைப்போலவும் எங்க தெருவில் ஒருசில பசங்க ரஜினியின் ரசிகனா இருந்தாங்க நாங்கள் ஒன்றாக கூடினோம்….. எங்க தெருவிலும் ஒரு ரசிகர் கூட்டம் உருவானது எங்க தெருவுக்கும் பக்கத்து தெரு பசங்களுக்கும் எப்போதுமே ஆகாது..! எங்களுக்கு போட்டியாக அவர்களும் ரஜினி ரசிகராக ஆனார்கள்..!!?
அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரு போட்டி அப்போ எங்க ஏரியாவுல மாவிரன் படம் இன்று முதல்னு போஸ்டர் ஒட்டி இருந்துச்சு அங்க எங்க ஏரியா ரசிகர் மன்றத்தின் மிக பெரிய ஒரு கண்ணாடி போட்டோ மாட்டி இருந்தார்கள்.அதேப்போல் நாமும் வைக்கலாம் என..! யார் பெரிய போட்டோ வைக்கிரார்கள் என்பதுதான் போட்டி..
எங்க தெரு பசங்களும் ஒரு முடிவு பண்ணினோம் அவரவர் வீட்டில் ஒரு ரூபாய் வசுல் செய்வது என்று அதேப்போல் கூட்டமாக சென்று அவஅவரின் அம்மாக்களை சந்தித்து விபரம் கூறினோம்..ஒருசில அம்மாக்களை தவிர மற்றவர்கள் வீட்டில் திட்டுதான் கிடைத்த்து… மொத்த வசூல் 7ரூபாய்தான் ஆனாது இதை வைத்து ஒன்னுமே செய்யமுடியாது.. அப்போது ஒரு போட்டோ பிரேம் செய்யனும்னா குறைந்த்து 25 ரூபாயாவது தேவை..!
என்ன செய்வது என ஆலோசிச்ச்துக் கொண்டு இருந்த போது என் நண்பன் சொன்னான் டேய் எங்க தாத்தா போட்டோ பரனியிலே ரொம்பநாளா கிட்க்கது யாருக்கும் தெரியாம எடுத்துதாரேன்னு சொன்னான்.எனக்கும் அதுசரினு பட்டது. நான் எப்பாடா கொண்டுவருவேனு கேட்டேன் மதியம் அம்மா தூங்கிடுவா அப்போ கொண்டுவரேன்னு போய்ட்டான்.. நானும் நண்பனின் வரவுக்காக காத்துக்கிடந்தேன்..
வந்தான் நண்பான் நான் நினைத்தவிட பெரிய போட்டோ.. வயதானவனிரின் தலையில் பொட்டுவைத்த அந்த தாத்தாவை பார்க்க பாவமா இருந்துச்சு நமக்கு போட்டிதானே முக்கியம் என பின்னில் இருந்த ஆணிகளை மெதுவாக உருவி போட்டோவை எடுத்துவிட்டேன்..நண்பன் சொன்னான் கிழித்துடுடலாம்டா இல்லாட்டி மாட்டிக்கொள்வோம் என்றான் நானோ வேண்டாம்டா மாவிரன் சினிமா மற்றியவுடன் அதை அதே போட்டோ மாற்றி உன் வீட்டில் வைத்து விடுனு சொன்னேன்…அவனும் நல்ல ஐடியா செய்துவிடுவோம்னு சொன்னான்..
வசூல் அனா 7ரூபாய்க்கு ஒரு ரஜினி படம் வாங்க மார்கெட் சொன்றோம் கிடைக்கவில்லை..! ஒரு கடையில் காலண்டர் மாட்டியிருந்த்து அதில் ரஜினியின் அழகான போட்டோ அதை விலைக்கு வாங்கினோம்..
மாட்டினோம் தியோட்டரில் போட்டோவை எதிர் தெரு பசங்க மூக்கு உடைந்தது.. அவர்களை காணும் போதெல்லாம் கிண்டல் செய்தோம்..

இப்படி பல முறை செய்து வீட்டில் உதை வாங்கியதுதான் எங்களுக்கு கிடைத்த மெடல்கள்..!




இப்போ வாரேன் அஜித்க்கு மாறிய கதைக்கு.. நாம் ரசிக்கும் கலைஞன் போல் வேர் ஒருவர் செய்தால் அது நமக்கு பிடிக்காது அது அவர் செய்தால்தான் பிடிக்கும் அதுப்போல 1998 ல் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள் விஜய் & அஜித் அதில் விஜய் ரஜினியின் ரசிகர்களை கவர்வது போல் செய்த சில பஞ்ச் டைலாக்கும் ஸ்டைல்களும் என்னை அவர் மீது ஒரு பெறுப்பை உறுவாக்கியது அதில் மறுபட்டவராக நம்ம தல தெரியவே அவரின் காதல் கோட்டை,ஆசை & அவள் வருவாளா போன்ற படங்கள் என் மனதில் நீங்க இடம் பிடித்து இருந்தனா..


என்னுள் அஜித் என்ற கலைஞன் உள்ளே வந்தான்..பின் அவரின் படங்களிம் பஞ்ச் வர தொடங்கின அதன் பிறகு வந்த அனைவரின் படங்களும் பஞ்ச் டைடில் சாங்க என சினிமா மீதே பெரிய வெறுப்பை ஏற்படுத்தி விட்டன..சமிபத்தில் பார்த்த படம்தான் அசல் என்னுள் மீண்டும் அந்த கலைஞன் உள்ளில் வந்தான்.ஏன் என்று தெரியல தல……??????

4 comments:

Philosophy Prabhakaran said...

அடப்பாவி... ஏன்னு தெரியலைன்னு சொல்ல தான் இவ்ளோ நேரம் மொக்கை போட்டியா...

prabhadamu said...

ஹீ ஹீ ஹீ மொக்கை மொக்கை

சௌந்தர் said...

http://rasikan-soundarapandian.blogspot.com/2010/05/blog-post_02.html

damildumil said...

சூப்பரா ஆரம்பிச்சு சப்புன்னு மூடிச்சிடீங்க